Categories
அரசியல்

“உச்சநீதிமன்ற உத்தரவை கொஞ்சம்கூட மதிக்கல”…  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்காதது ஏன்? என்று பலமுறை தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியும், அதற்கான பதிலை தெரிவிக்கவில்லை.

இதனால் நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ. 246 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இது முற்றிலும் பொய். இந்தியாவிலேயே அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கப்போகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |