தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது தமிழ்மொழி உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக மாற்றப்படவேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கக் வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் களுக்கு முன்பு நம் அனைவரின் சார்பாக நான் விடுகிறேன். நம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்ற உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக செயல்படக்கூடிய நிதியரசர்களும் அதற்கு துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் பேசினார்.