Categories
மாநில செய்திகள்

உச்சநீதிமன்ற கிளை….. “சென்னையில் அமைக்க வேண்டும்”….. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!!

சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மனித உரிமை பாதுகாப்பு சட்டமானது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு அமைந்த பிறகு தான் மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒரு நாள் கூட தவற மாட்டோம். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார்.

Categories

Tech |