Categories
உலக செய்திகள்

“உச்சமடையும் கொரானா”…. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!

தென்கொரியாவில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி 2,66,838 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தென்கொரியாவில் வருகின்ற 9 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சுமார் 3,500 க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது, கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |