Categories
தேசிய செய்திகள்

உச்சம் தொடும் கொரோனா “ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்”….. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் தொடர்ந்து மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு மருத்துவ சேவைக்கான ஆக்சிஜனை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைகளில் திரவ நிலை ஆக்ஸிஜனை நிரப்பப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அதற்கு தடையற்ற விநியோகத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும் நோயாளிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |