இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையானது உச்சம் தொட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை- செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 38 சதவீதம் ஸ்மார்ட் டிவி விற்பனை அதிகரித்து இருப்பதாக கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது டிவி விலையில் ஏற்பட்ட சரிவே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஓடிடி பார்வையாளர்கள் அதிகரித்ததாலும், ஸ்மார்ட் டிவி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
பிராண்டுகளை பொறுத்தவரையிலும் “ஷாவ்மி” 11 % பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் “சாம்சங்” 10 % பங்களிப்புடனும், எல்.ஜி 9 % பங்களிப்புடனும் இருக்கின்றன. வேகமாக வளரக்கூடிய பிராண்டுகள் வரிசையில், வி.யு., டி.சி.எல்., ஒன்பிளஸ் போன்றவை முன்னணியில் இருக்கிறது. அதிக மாடல்களை அறிமுகம் செய்வதில் எல்.ஜி., நிறுவனமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.