முன்னணி நடிகரான விஜய் கமர்ஷியல் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றதாதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே நின்று பேசியது.
விஜய் பல கமர்சியல் படங்களில் நடித்தாலும் கமர்சியல் இயக்குனர்களான சுந்தர்.சி, பாண்டிராஜ், ஹரி, சிறுத்தை சிவா உள்ளிட்டோர் உடன் இணைந்து இதுவரையில் பணியாற்றவில்லை. பிற முன்னணி நடிகர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர் பணியாற்றாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு பொருத்தமான கதை அமையவில்லையா? இயக்குனர்கள் ஆர்வம் காட்டவில்லையா? இல்லை இந்த இயக்குனர்கள் தனக்கு செட்டாக மாட்டார்கள் என விஜய் முன்வரவில்லையா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இனி இவர் இந்த கமர்சியல் இயக்குனர்களுடன் இணைவாரா? என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.