உச்சநீதிமன்ற லோகோவில் இடம் பெற்ற வாசகம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் லோகோவில் முன்பாக “சத்யமேவ ஜெயதே” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது “யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே” என்ற வாசகமானது இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வித பதிவுகளை ஆய்வு செய்ததில், “யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே” என்ற வாசகமே ஆரம்பத்திலிருந்து உச்சநீதிமன்ற லோகோவாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
வைரல் பதிவுகள் உண்மையா என்பதை கண்டறிவதற்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள லோகோவினை ஆய்வு செய்தனர். மூத்த செய்தியாளரான புன்யா பர்சுன் பாஜ்பாய் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் லோகோ தேசிய சின்னத்தில் புகைப்படங்களுடன் மாற்றப்பட்டு விட்டது எனவும், சத்யமேவ ஜெயதேவுக்கு மாற்றாக யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே என்றும் மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆய்வில் வெளிவந்த தகவல்களின் மூலம் உச்சநீதிமன்ற லோகோவில் உள்ள வாசகம் மாற்றப்படவில்லை என்பது உறுதியானது. எனவே சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், இவ்வாறு போலி செய்திகளை பரப்புவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். போலியான செய்தியின் காரணமாக நாட்டில் பல சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.