சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் கொத்தனாரான சின்னசாமி(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதற்கு சின்னச்சாமி மற்றும் சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னச்சாமி, அவரது தாய், சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து தலைமுறைவாக இருந்த சின்னசாமியை நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.