சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் ஜெயமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தம்பதியினர் ஒத்திகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒத்திகை காலம் முடிந்த பிறகு பணத்தை திரும்ப கேட்டதற்கு ஜெயமோகன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் அந்த தம்பதியினரின் மகளான 12 வயது சிறுமிக்கு ஜெயமோகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஜெயமோகனின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஜெயமோகன் மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு தலைமறைவாக இருந்த ஜெயமோகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.