Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி செயல்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியை  சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே   ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில்  இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

Categories

Tech |