சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நிலக்கோட்டை-ஆனைகட்டி சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் என்பவர் உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என எச்சரித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் சாலையின் முன்பு வைத்திருந்த தங்களது விளம்பர பேனர்களை அகற்றியுள்ளனர். மேலும் பொது மக்கள் சாலைகளில் நிறுத்தி இருந்த தங்களது வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.