பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கரிசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது.
இதனால் முதியவர், சிறு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக மின்னழுத்தம் குறைவு ஏற்படும் கிராமங்களில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.