புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். இந்நிலையில் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் வணிக செயலாளர் ஜோக்கப் ரீஸ்மோக், நிதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அலோக் சர்மா மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கான துறை இதுவரை ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் பெண் வாய்ஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.