Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!

கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில்  அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம்  நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  என  தரம் பிரித்து உரமாக மாற்றி  விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில்  அருகே பல கல்குவாரிகள் உள்ளது.

அந்த கல்குவாரிகளில் எப்போதும் தண்ணீர் உள்ளதால் அருகில் உள்ள பெரியார் நகர் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது உரம் தயாரிக்க தேவையில்லாத பிளாஸ்டிக் குப்பைகளை அருகில் உள்ள கல்குவாரிகளில் ஊழியர்கள் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம்  பாதித்து வருகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |