ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே வைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேவகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.