ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் முன்பு வைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கிளைத் தலைவர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே உடனடியாக கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.