ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மும்தாஜை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அவருக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நபரை காலிசெய்ய மும்தாஜ் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மும்தாஜ் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது.