மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பெரியகுடி கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் துரப்பண கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது.
இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அப்போது உள்ள கருவிகள் மூலம் கிணறு மூடப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டது. இந்த வசதிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மூட வேண்டும். அதன் பிறகு வேறு எவ்வித பணிகளும் இந்த கிணற்றில் மேற்கொள்ளப்படாது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.