அ.ம.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் வைத்து அ.ம.மு.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் செயலாளர் கணபதி,துணை செயலாளர் முருகன்,இணை செயலாளர் பொக்கிஷம்,பொருளாளர் அண்ணாதுரை,மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், ஒன்றிய செயலாளர் விக்ரவாண்டி தமிழ்ச்செம்மல்,கோதண்டபாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .