பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம், கொண்டத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்வதற்கான தொகையை ஆவின் நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பாலையும் கொள்முதல் செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மீண்டும் பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.