பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கி செல்வோர் என அனைவரும் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தின் மேற்கூரையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.