கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராசு, தர்மராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரதாப்சிங், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.