Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக தூர்வார வேண்டும்” நடைபெற்ற பணிகள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

தூர்வாரப்பட்ட குடிநீர் கால்வாயை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பேரூராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சேறும் சகதியுமாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் நீர் நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரூராட்சியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் உடனடியாக தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

Categories

Tech |