Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” விவசாயிகளின் தொடர் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் தொடர் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |