வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென யூரியா அதிக விலைக்கு விற்பதாகவும், அதன் தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
மேலும் சிறப்பு பட்டாமாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், ராஜ் உள்ளிட்ட கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.