மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அவர்கள் மனுக்கள் மீதான எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மனுதாரரிடம் தெரிவிப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்