நடைபெற்ற நேர்காணல் முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் வடகரைவயல், கானூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிரேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த நேர்காணல் முகாமில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் நேரடியாக மனுக்களை பெற்று மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவர்கள் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைப்பார்கள்.
எனவே பொதுமக்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனையடுத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 49 பயனாளர்களுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் 10 பயனாளர்களுக்கு வேளாண்துறை சார்பில் உயிர் உரம், தோட்டக்கலை சார்பில் 5 பயனாளர்களுக்கு காய்கறி விதைகள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.