Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக நியமிக்க வேண்டும்…. ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினரின்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட நிர்வாக நிதியை காலதாமதம் இல்லாமல் அனைத்து வட்டாரங்களிலும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி மற்றும்  சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |