Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிட்டப்பா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் நகர செயலாளர் துரைக்கண்ணு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |