பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பி.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் வேலன், மாவட்ட துணை தலைவர் விஜய், நகர் செயலாளர் வக்கீல் சிவசாகர், செயலாளர் ஜெயராஜ், பகத்சிங், சரவணன், கிஷோர், ஒன்றிய தலைவர் மதன் சிங், வீரசேகரன், அருண்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.