காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கான விலை உயர்த்தியதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், தலைமை பேச்சாளர் சிங்கைதர்மன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.