மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், உறுப்பினர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானசூரியன் பெஞ்சமின், முருகசரவணன், சாமிநாதன், ஜீவானந்தம், சுந்தரபாண்டியன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுதிய சங்க முன்னாள் தலைவர் கல்யாணம், சங்க உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.