Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடனடியா நடவடிக்கை எடுங்க…. சாலையில் படுத்து போராடிய லாரி டிரைவர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவரை சாலையில் இருந்து எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வீரமணி “பூர்வீக சொத்தைப் பிரித்து தராமல் தன்னை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை உடனடியாக பெற்று தர வேண்டும்” எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |