Categories
மாநில செய்திகள்

உடனடி ஆக்க்ஷன்… பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான  இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் உடனடி நடவடிக்கைகளை எடுத்த பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை  சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும்  சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றன. அதனால் அரசு பள்ளி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை  கண்டறிந்து அதனை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |