ஜவ்வரிசி அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 100 கிராம்
ஜவ்வரிசி – ½ கப்
பால் – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
சர்க்கரை – ½ கப்
குங்குமப்பூ – சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
முந்திரி, திராட்சை – சிறிதளவு(வறுத்தது)
ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்
ஜவ்வரிசி – ½ கப்
பால் – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
சர்க்கரை – ½ கப்
குங்குமப்பூ – சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
முந்திரி, திராட்சை – சிறிதளவு(வறுத்தது)
ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரில் சிறிதளவு நெய்விட்டு, அதில் அரை கப் ஜவ்வரிசியை சேர்த்து, மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் விடவும்.
பின்பு ஆவி அடங்கியதும், குக்கரை திறந்து ஜவ்வரிசி நன்கு வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். வேகவில்லை என்றால் இன்னும் 2 விசில்கள் விடலாம்.
அதனை தொடர்ந்து ஒரு நான்ஸ்டிக் கடாயில் இந்தக் கலவையை ஊற்றி, அத்துடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு நெய்யும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இறுதியில் நெய் கடாயின் ஓரத்தில் பிரிந்து வரும் பொழுது, வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அல்வாவை வேரொரு பாத்திரத்திற்கு மாற்றி, அல்வா அதிகம் கெட்டியானதும், சூப்பரான ஜவ்வரிசி அல்வா ரெடி.