Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனுக்குடன் அறியலாம்” நடமாடும் உணவு பரிசோதனை கூடம்…… அதிகாரிகளின் தகவல்….!!!

தமிழகத்திற்கு இரண்டு நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.

இந்த வாகனம் மூலம் காலாவதி தேதி, உணவின் தரம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மிளகாய் தூள், தேயிலை, பால், பொரித்த கோழி இறைச்சி, பருப்பு வகைகள், குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கை வழங்கப்பட உள்ளது. எனவே வணிகர்களும் பொதுமக்களும் உணவு பொருட்களை பரிசோதனை செய்து அதில் கலப்படம் இருப்பதை அறிந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |