தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அமமுக தொண்டர்கள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமமுக சார்பாக பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.