Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உடனே அப்டேட் செய்யவும் – கூகுள் முக்கிய அறிவிப்பு…!!!

உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காரணத்தினால் இணையதளத்தை பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. மறுபக்கம் தகவல்களை திருடும் ஹேக்கர்களும் அதிகமாகி விட்டனர்.

இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசர் தற்போது பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்வதற்கான மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது. குரோம் பிரௌசர் ஓபன் செய்தவுடன் மேல் வலது மூலையில் 3 புள்ளி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் About Chrome  என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதை கிளிக் செய்தால் புதிய அப்டேட் பெறலாம். இனி உங்கள் அந்தரங்க தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியாது.

Categories

Tech |