2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு நாளையுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் (நாளைக்குள்) தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் தற்போது செலுத்திவிடுங்கள்.