தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தீவிரமடைந்து தற்போதுதான் சற்று குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொசு மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதன்படி, வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், நட்சத்திர ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், மருத்துவமனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், அபராதம் வசூலிக்கப்படுகிறது.