பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியமானது கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசமானது பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பாக ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு எண் பயனற்றதாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், பயனற்ற பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் கெடு தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தவறி விட்டால் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பயனற்ற பான் கார்டு எண்ணை சமர்பித்ததற்காக ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இருப்பினும் உங்களின் பான் கார்டை அடையாள ஆவணமாக அதாவது, வங்கி கணக்கு தொடங்க ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்க ஆகியவற்றிற்கு பயன்படுத்தினால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது என தகவல்கள் கூறுகின்றன. பயனற்ற பான் கார்டை அடையாள ஆவணமாக நீங்கள் வங்கி கணக்கு துவங்கும் பட்சத்தில் 50 ஆயிரத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஏனென்றால் 50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைகளை வருமானத்துறையின் கண்காணிப்பில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே நீங்கள் 50 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ பான் கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும்.