உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio cassis வெளியிட்டு இருக்கின்ற வீடியோ ஒன்றில் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலை கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என கூறி இருக்கின்ற இவர் ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா முதலான பகுதிகளில் இருந்தும் அந்த நாடு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார். நடுநிலை நாடு என அறியப்படும் சுவிட்சர்லாந்து முதலில் ரஷ்ய ஊடுருவல் பற்றி முதலில் கருத்து தெரிவிக்க தவறிய நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றியுடன் இணைந்து ரஷ்யா மீது தடைகள் விதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories