Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க வாட்ஸ்அப் Update பண்ணுங்க… வந்துடுச்சி செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக வழங்குவதற்கு மத்திய அரசின் என்பிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற சைகைகள் பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இனி வாட்ஸ் அப் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யலாம்.

இந்நிலையில் இந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் மூலம் வர்த்தகர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒருவர் மற்றொருவருக்கு சுலபமாக பணம் அனுப்பலாம். எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகள் ஆதரவுடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உடனே உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள்.

Categories

Tech |