Categories
டெக்னாலஜி

உடனே கார் வாங்குங்க…. அடுத்த மாதம் முதல் விலையை உயர்த்த ஹோண்டா முடிவு…. இதுதான் காரணம்….!!!!

பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.

ஆண்டுதோறும் பல கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 2  வாரங்களே  இருக்கிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனோ, கியா  உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்த போவதாக கூறியுள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும்  விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை  உயர்த்த போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் குனால் கூறியதாவது,”தற்போது சர்வதேச சந்தையில் கார் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக சில கருவிகள் கார்களில் பொருத்தப்பட வேண்டும். எனவே பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதேபோல் நாங்கள்  பொருட்கள் விலை உயர்வையும், புதிய விதிமுறைகளுக்கான தேவைகளையும் ஆய்வு செய்த பின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்”என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |