தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடன் உள்ள முதியோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உட்பட 600 இடங்களிலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 160 இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது