கோவிஷில்டுதடுப்பூசியை தாமதமின்றி அனுப்பி தங்கள் நாட்டுக்கு உதவுமாறு பிரேசில் அதிபர் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவிஷில்டு தடுப்பூசியை தாமதமின்றி அனுப்பிய தங்கள் நாட்டிற்கு உதவுமாறு பிரேசில் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரேசில் அதிபரின் கடிதத்தை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியை உடனடியாக அமல்படுத்த 20 லட்சம் டோஸ்களை விரைவில் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.