தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த லேப் டெக்னீசியன்கள் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் நடைபெறும் முகவரி- சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை-600003
இதற்கான மாத சம்பளம்: 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை.