டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக ராகுல் காந்தியுடன் வெளிநாடு சென்றிருந்தார் சோனியா காந்தி. அதன்பிறகு நாடு திரும்பிய அவருக்கு, தற்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான காற்றுமாசு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா பிரச்சினை காரணமாக சோனியா காந்தி தற்போது டெல்லியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரையை ஏற்று அவர் கோவா செல்ல தயாராவதாகக் கூறப்பட்டுள்ளது. சோனியா காந்தி உடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.