Categories
மாநில செய்திகள்

உடனே பணிநீக்கம் செய்து, ஊதியங்களை வசூலிக்கவும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவர் இனிய மணத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, கல்வித்தகுதி சான்றிதழ் பல்கலைக்கழக விசாரணையின்போது கௌதமன் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தகுதி இல்லாத அவரை ஓய்வு பெற அனுமதித்த பல்கலைக்கழகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி,அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்றவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும் வசூலிக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகம் பணி நியமனம் பெறுவதற்கு மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |